" நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
masu

அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ma Subramanian

சென்னை காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றது.  இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரகுராம் தலைமையிலான ஆறு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சையை  மேற்கொண்டனர்.  சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்ற  நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.  தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ma subramanian

இந்நிலையில் சச்சினை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  "செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது, அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவித்தார்,  தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 10 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது" என்று கூறினார்.