வரும் 23ம் தேதி மீனம்பாக்கம் மற்றும் கிண்டி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
வரும் 23ம் தேதி மீனம்பாக்கம் மற்றும் கிண்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

23.01.2026 அன்று VVIP சென்னைக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் “சிவப்பு மண்டலமாக (RED ZONE)” அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர, 23.01.2026 அன்று, மேற்குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் (Unmanned Aerial Objects) பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், 2023 ஆம் ஆண்டு, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழும், 2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 21.12.2025 முதல் 18.02.2026, வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.


