தமிழகத்தில் ஜன.22 தடுப்பூசி முகாம் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

 
மா

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


அதிகரித்தும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  தமிழகத்தை பொறுத்தவரை வாராவாரம் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.. பொங்கல் பண்டியையொட்டி, இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. இருப்பினும் ஆங்காங்கே நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்  என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தடுப்பூசி

அதேபோல் இனி தடுப்பூசி முகாம்களில்18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல், 15 முதல் 18 வயதுடையவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வரும்  சனிக்கிழமை ( ஜனவரி 22) என்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.  தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.  

தடுப்பூசி

இதனைத்தொடர்ந்து நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 700 படுக்கைகள் இருப்பதாகவும்,  அவற்றில் 90 கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக  தெரிவித்தார்.  மேலும் அவற்றில் 350 படுக்கைகள் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கொண்டாட்டங்களை தாண்டி உயிர் முக்கியம் என்பதால் மக்கள்  கடற்கரைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்  கூறியுள்ளார்.