“திருமணத்துக்கு முன் சட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்”- பீச்சில் ஆண்கள் தின கொண்டாட்டம்

 
ஆண்கள் தின கொண்டாட்டம்-

நாளை உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நாளை உலக ஆண்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன் (save indian family fountion) என்கிற ஆண்களுக்கான தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த வகையில் ஒரு சில பெண்கள் இருக்கின்ற சட்டங்களை ஆண்களுக்கு எதிராக தவறுதலாக பயன்படுத்துவதாகவும், அதே நேரத்தில் குடும்ப உறவுகளில் முக்கியமானதாக இருக்கக்கூடிய  ஆண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் உடல் ரீதியாக இருக்கக்கூடிய பட்சத்தில் மருத்துவமனை மூலமாகவும், மனரீதியினராக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு மனோ தத்துவ ரீதியாகவும்  எங்களுடைய அமைப்பு மூலம் தீர்வு காண முடியும், எங்களுடைய அமைப்பில் இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்களுடைய அமைப்பில் சேர்வதற்கு இணையதளம் உள்ளது தொலைபேசி எண்கள் உள்ளது என்றும் எந்த ஒரு ஆணும் எந்த ஒரு நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஏதேனும் அவர்களுக்கு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை சரி செய்வதற்கு நாங்கள் உறு துணையாக இருப்போம் எனவும் சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.