பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய சிறுவன் கொலை செய்து புதைப்பு- 3 பேர் கைது
பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் மனநலம் குன்றிய இளைஞர் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக தேடப்படும் ஜென் ஹீலிங் நிர்வாகி கவிதா லட்சுமணன், ஷாஜி உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளான நித்திஷ், ரங்கநாயகி, செந்தில் பாபு ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இவ்வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கருதப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் கவிதா லட்சுமணன் மருத்துவர் இல்லை என்பது வெளியாகி உள்ளது.அவர் மனநல ஆலோசகர் என கூறப்படுகிறது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க பன்னாட்டு விமான நிலையங்கள், பன்னாட்டு துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


