மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் - 2 புதிய வழித்தடங்களுக்கு டெண்டர்
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மிக அதிவேக ரயில்வே (Semi High Speed Railway) அமைப்பினை 3 வழித்தடங்களில் உருவாக்குவது தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் 14ம் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு, தலைநகர் புதுடெல்லி- மீரட் நகரங்களுக்கிடையே மித அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்கி இயக்கப்படுவதைப் போன்று. மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System - RRTS)ஒன்றினை தமிழகத்திலும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி, மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மிக அதிவேக ரயில்வே (Semi High Speed Railway) அமைப்பினை 3 வழித்தடங்களில் உருவாக்குவது தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. இதன்படி, சென்னை -செங்கல்பட்டு-திண்டிவனம் -விழுப்புரம் வழித்தடத்தில் 167 கி.மீ, சென்னை-காஞ்சிபுரம்- வேலூர் வழித்தடத்தில் 140 கி.மீ, கோயம்புத்தூர்-திருப்பூர் ஈரோடு – சேலம் வழித்தடத்தில் 185 கி.மீ என்று 3 வழித்தடங்களில் உருவாக்குவது தொடர்பான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. இந்த சாத்தியக்கூறு அறிக்கைகளில் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


