சேலத்தில் மெட்ரோ ரயில்: சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும் என தகவல்..

 
மாண்டஸ் புயலால் இத்தனை கோடிக்கு சேதமா??  -  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை..

சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதம் நிறைவுபெறும்  என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது..

சென்னை  மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையிலும்,  சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் முதல் கட்டமாக மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு முழுமையாக செயல்பாட்டில் இருந்து வருகின்றன.  இதில் இரண்டாவது கட்டமாக 63 ஆயிரத்து 246 கோடி செலவில் மேலும் 3  வழிதடங்களுக்கான பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதேபோல் சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு இருக்கிறது.

மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு!

 அதன்படி மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ அமைப்பதற்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்த நிலையில் சேலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம். சேலத்தில் மெட்ரோ ரயில் தடம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதம் இறுதி செய்யப்படும் என்றும்,  திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் அல்லது மே மாதம் இறுதியில் நிறைவுபெறும் எனவும் கூறியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.