தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

 
metro

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள் நிலையில்,  இதன் காரணமாக பயணிகள் அவதியடைந்துள்ளனர். 

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேனாம்பேட்டை டிஎம்எஸ் - சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு் காரணமாக ஒற்றை பாதை ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு ரயில் சேவை மீண்டும் சீராக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.