நிரம்பிய மேட்டூர் அணை : 12 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

 
நிரம்பிய மேட்டூர் அணை :  12 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..  நிரம்பிய மேட்டூர் அணை :  12 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. 


காவிரி கரையோரங்களில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள்    நிரம்பியுள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை ஏற்கனவே முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக அதே நிலையில் நீடிக்கிறது. அதேநேரம் அணைக்கு நீர் வரத்து காலை 8 மணி நிலவரப்படி 60,500 கன அடியாக இருந்து வந்தது. 

காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 31,571 கனஅடியாக குறைப்பு.. என்ன காரணம்?

பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே முழுவதுமாக 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகின்றன. மேலும், நீர் மின் நிலையங்கல் வழியாக 18,000 கன அடி நீரும்,  கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக ஒரு லட்சம் கனஅடியாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை , அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்து,  தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களையும், மேட்டூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

நிரம்பிய மேட்டூர் அணை :  12 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. 

இதனையடுத்து காவிரியின் இரு கரைகளிலும்  வருவாய் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  மேட்டூர் தீயணைப்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ள நிலையில்,  தமிழ்நாடு பேரிசர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதின் பேரில் 60 பேர் கொண்ட 2 குழுக்கள் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள விரைந்துள்ளனர்.