90 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை

 
dam

90 ஆண்டுகளில் முதல் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளது.

Mettur dam full; flood warning issued to 11 districts

1934-ல் கட்டப்பட்டு திறக்கப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. இந்நிலையில் சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார தமிழ்நாடு நீர்வளத்துறை திட்டமிடபட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதியை பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவை மையம், தமிழக நீர்வளத்துறை இணைந்து, சாத்தியக் கூறு அறிக்கையையும் தயார் செய்துள்ளது. சாத்திய கூறு அறிக்கையின்படி மேட்டூர் அணையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டமிடபட்டுள்ளது.