மேட்டூர் அனல்மின் நிலையம் முன்பு உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தர்ணா

 
mettur mettur

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சரிந்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சிக்கி ஸ்ரீகாந்த், மனோஜ், சீனிவாசன், முருகன், கௌதம் ஆகிய 5 ஒப்பந்த தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதிய பராமரிப்பு இல்லாததால் விபத்து நிகழ்ந்ததாக ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

இந்த நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சரிந்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு முறையான நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.