புலம்பெயர் தொழிலாளர்கள் கொலையா? - நடவடிக்கை பாய்ந்ததை அடுத்து வதந்தி பதிவை நீக்கிய பாஜக நிர்வாகி..

 
வட இந்தியர்கள்

வதந்தி பரப்பியது  தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்ததை அடுத்த,   புலம்பெயர் தொழிலாளர் பற்றிய பதிவை உத்தரப்பிரதேச  பாஜக நிர்வாகி நீக்கி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இந்தி பேசிய 12 தொழிலாளர்கள் கழுத்தறுத்துக் கொள்ளப்பட்டதாக உத்திரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் ட்விட்டரில் வதந்தி பரப்பி இருந்தார்.  உமராவ் பதிவிட்ட வதந்தி ட்விட்டை பாஜகவை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  பிரசாந்த் உமாராவ் பதிவு முற்றிலும் வதந்தி  என தமிழ்நாடு அரசு விளக்கமளித்த போதிலும், அந்த பதிவு வைரலானது. இந்நிலையில்  பொய்யான தகவலை பரப்பியதற்காக அவர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அத்துடன்  தனிப்படை அமைத்து தேர்தல் வேட்டையிலும்  இறங்கி உள்ளது.  

வட இந்தியவர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக பரவிய வதந்தி பீகார் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரத்தின் பின்னணியில் பீகார் மாநில பாஜக இருக்கிறதா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. உத்திரபிரதேச பாஜக நிர்வாகி வதந்தி பரப்பியது  மட்டுமின்றி , இது தொடர்பாக ஹிந்தி ஊடகங்களிலும் வெளியான சில பொய் செய்திகளையும் பிஹார் பாஜக பகிர்ந்து இருக்கிறது. பீகார் பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கம் மட்டுமின்றி அக்கட்சி எம்எல்ஏக்கள்,  எம்சிக்கள் சிலரும் இந்த வதந்தியை அவர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில்  பதிவிட்டு இருந்தனர்.

ஹைதராபாத்தில் இரு தனி நபர்களுக்கு இடையே  நடைபெற்ற மோதலை தமிழ்நாட்டில் நடந்தது போல் சித்தரிக்கப்பட்டு வதந்தி பரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன்  முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்  பங்கேற்றதையும் , இந்த வதந்தியையும் ஒப்பிட்டு பாஜக விமர்சனம் செய்திருந்தது. இந்நிலையில் வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார்  வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் நடவடிக்கை தீவிரமடைந்ததால் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக பதிவிட்டிருந்த வதந்தி பதிவை பாஜக நிர்வாகி உமாராவ் நீக்கி இருக்கிறார்.

3 மாநில தேர்தல் முடிவுகள் : நாகாலாந்து , திரிபுராவில் பாஜக முன்னிலை..

 வதந்திகளை செய்தியாக வெளியிட்ட டெய்னிக் பாஸ்கர்,  தன்வ்ர் போஸ்ட் ஆகிய ஆகியோ பத்திரிக்கை ஆசிரியர்கள் மீதும் தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  பொய் செய்திகளை வெளியிட்ட பீகார் பாஜக நிர்வாகிகள் எம்பி , எம்எல்ஏக்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய வதந்தி வீடியோக்கள் பரப்பப்படுவதற்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.