"அப்பாவை நம்பாமல் ஒட்டுகேட்பு போன் வைத்த புள்ளை"- அன்புமணியை விமர்சித்த அன்பரசன்
பெற்றவர்கள் வயிறு எரிந்தால் யாரும் வாழ முடியாது என பாமக தலைவர் அன்புமணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம் செய்தார்.
![]()
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் தா.மோ .அன்பரசன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர் . இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்து வருகின்றனர் வேகமாக மனுக்கள் பெறப்பட்டு ஒரு சில துறைகளில் மனுக்கள் உடனடி சரி பார்த்து பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது பரணிபுத்துத்தூரை சேர்ந்த நிர்மலா தேவி என்ற விவசாய பெண்ணுக்கு மானியம் மூலம் சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள வயலில் நடவு நடக்கூடிய நவீன இயந்திரத்தையும் அமைச்சர் அன்பரசன் வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பரசன், பாமக தலைவர் அன்புமணி குறித்தான கேள்விக்கு அப்பா மனது நோகும் அளவிற்கு புள்ளை நடந்து கொள்கிறார், அப்பாவை நம்பாமல் அப்பா நாற்காலியில் ஓட்டு கேட்கும் போன் வைத்துள்ளார். பெற்றவர்கள் வயிறு எரிந்தால் யாரும் வாழ முடியாது என அன்புமணியை விமர்சித்து பேட்டி அளித்தார்.


