அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

 
anbil magesh anbil magesh

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  நேற்று கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து காரிமங்கலத்தில்  உள்ள தனியார் மருத்துமவையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத்தொல்லை ஏற்பட்டது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில்  வைக்கப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடதக்கது.