குழந்தைகளை கொண்டாடுவோம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து!

 
anbil magesh

குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மறைந்த பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்றும் நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான குழந்தைகள் தின கருப்பொருள் அனைத்து குழந்தைகளும், அனைத்து உரிமைகளும் ஆகும். இந்த நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். "பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே!" என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய 
குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.