பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத புதிய நடைமுறை - அமைச்சர் தகவல்!
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு தொடர்பான கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவதுபிளஸ் 2 தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவரொருவர், வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் தேர்வெழுதும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது.
வருங்காலங்களில் மாற்றுத்திறன் மாணவர்கள் தாமாக தேர்வெழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8,21,057 பேர் எழுத உள்ளனர். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,23,261 மாணவர்கள் எழுத உள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,036 மாணவர்கள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வின்போது தினசரி 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.


