கொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு துணை நிற்போம்- அன்பில் மகேஷ்

 
அன்பில் மகேஷ்

தஞ்சாவூரில் வகுப்பறையில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
 
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “இது போன்ற சம்பவம் பள்ளிக்குள் நடந்திருக்கக் கூடாது. ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் என்னிடம் கேட்டறிந்தார். இன்று மாலை விமானத்தில் தஞ்சை செல்கிறேன். சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். பள்ளி மேலமைக்குழு மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியையின் மறைவு உள்ளபடியே வேதனைக்குள்ளான ஒன்று, கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும். ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். உடனடியாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

murder

ஆசிரியர் கொலை செய்யப்பட்ட பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் பயந்துவிடாமல் அவர்களின் மனநலன் பாதிக்காத வகையில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் நேரில் சென்று விசாரித்த பின்னர் இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசுகிறேன்” என் தெரிவித்தார்.