"பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதும் நடக்கவில்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil

சேதமடைந்த பள்ளிக்கூட கட்டடங்கள் இருந்தால் உடனடியாக இடிக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

anbil-mahesh-3

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால், பள்ளி ,கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் , தொடர்ந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . மழை பாதிப்பு தொடர்பாக பள்ளி,  கல்லூரிகளுக்கு நவம்பர் மாதம் பல நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? என கேள்வி எழுந்த நிலையில்,  மழை ஓய்ந்த  பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதலாக வகுப்புகள் நடத்தப்பட்டு,   பாடத்திட்டங்கள் முடிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

school opening

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, " பள்ளிக்கூடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடங்கள் இருந்தால் உடனடியாக உத்தரவிட்டுள்ளோம்.  சிபிஎஸ்இ  மட்டுமே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைத்துள்ளனர்.  நம்மைப் பொருத்தவரை அது போன்ற தேர்வுகள் ஏதும் நடக்கவில்லை" என்றார். தொடர்ந்து மழையால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவ்வாறு தெரிவித்துள்ளார்.