சுழற்சி முறை வகுப்புகள் ரத்து - டிசம்பர் 25ஆம் தேதி மீண்டும் ஆலோசனை!!

 
anbil-mahesh-3

தமிழகத்தில்  கொரோனா  தொற்று குறைந்து வந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.  இதையடுத்து  ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும்,  பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில்  கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Tomorrow school leave

இந்த சூழலில் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப் பட்டிருந்த ஊரடங்கின்  காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாத இதனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் அதாவது ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளும்,  அனைத்து கல்லூரி வகுப்புகளும் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

anbil


இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்; அடுத்து அவர் பெரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்ற மக்களின் ஆசையை கூறினேன். உதயநிதி அமைச்சராக வந்தால் நல்லது என நினைக்கிறேன். மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள், பெற்றோர் காதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று வாயை அடைக்க வேண்டாம், அவ்வாறு செய்தால் அதற்குப்பின் மாணவர்களிடமிருந்து எதையும் பெற முடியாது என்றார்.

அத்துடன்  6 முதல் 12ம் வகுப்புகளுக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி வருகின்ற 25 ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் தினமும் வகுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடக்கிறது.