அமைச்சர் சி.வி.கணேசனின் மனைவி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...

 
அமைச்சர் சி.வி.கணேசன் அவரது மனைவி


தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சி.வெ.கணேசனின் மனைவி பவானியம்மாள் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 55. நீண்ட நாட்களாக  உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பவானியம்மாள், நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

1

இந்நிலையில் அமைச்சரின் மனைவி மறைவிற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், “ அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் துணைவியார் திருமதி. பவானி அம்மாள் அவர்கள் திடீரென்று மறைவெய்திய அதிர்ச்சி செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது ஒவ்வொரு துளி முனேற்றத்திற்கும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்த வழ்க்கைத் துணைவியாரை இழந்து வாடும் மாண்புமிகு அமைச்சர் திரு.கணேசன்  அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் இரங்கல்