சற்றுமுன் வந்த சோக செய்தி... முக்கிய அமைச்சரின் மனைவி திடீர் மரணம்!

 
அமைச்சர் சிவி கணேசன்

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் சி.வெ.கணேசன் (57). இவரது மனைவி பவானியம்மாள் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 55. நீண்ட நாட்களாகவே பவானியம்மாள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. விருதாச்சலத்திலுள்ள அமைச்சர் கணேசன் இல்லத்தில் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Image

இதையடுத்து வரது உடல் வீட்டிற்கு கொண்டவரப்பட்டுள்ளது. அமைச்சரின் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் திமுக தொண்டர்களிடையே அதிர வைத்துள்ளது. திமுக தலைவர்களும் தொண்டர்களும் மனைவியை இழந்த அமைச்சர் கணேசன் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துவருகிறார் முதல்வர்” - அமைச்சர் சி.வி.  கணேசன் பேட்டி!! | nakkheeran

அமைச்சர் சி.வி.கணேசன் திட்டக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 2016, 2021 என இருமுறை போட்டியிட்டு வென்றார். 2021 தேர்தலில் அதே தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலினால் முன்மொழியப்பட்டார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார்.