நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை!

 
tn

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தலைமையில் யில் இன்று (10.02.2024) தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசும்போது கீழ்கண்ட அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள். நீர்வளத்துறையின் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பாக தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் கட்டுமானம் செய்தல், காவிரி படுகை சிறப்பு தூர் வாரும் பணிகள், மேலும் தற்போது நடைபெற்று வரும் முக்கிய திட்டப் பணிகள் ஆகிய அனைத்து பணிகளும் எதிர்வரும் பருவ மழை காலத்திற்கு முன்னர் போர்க்கால
அடிப்படையில் முழுவதுமாக செய்து முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள். 


கடந்த 12/2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாகவும், தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதீத கன மழை காரணமாகவும் நீர்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களை, நிரந்த வெள்ள சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தினார்கள். பருவ மழை காலங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள். வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.