பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது - அதிமுகவை விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்

 
Duraimurugan

ஜெயலலிதா பல்கலைக்கழக பெயரை மாற்றியதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறிவிட்டு அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள்  என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில்  தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.  இந்த நிலையில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயர் ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தொடரில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

assembly

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் , ஜெயலலிதா பல்கலைக்கழக பெயரை மாற்றியதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறிவிட்டு அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டதாக அதிமுக கூறினாலும், ஆளுநரை எதிர்ப்பது மோடியை எதிர்ப்பதாகும் என்பதால் பொய்யான காரணத்தை கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். கிராமத்தில் ஒன்று சொல்வார்கள் அது போல பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது. இவ்வாறு கூறினார்.