கர்நாடக அரசு 16,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

 
duraimurugan

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

duraimurugan

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழகத்துக்கு காவிரியில் அக்டோபர் 30ஆம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.  நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 16,000 கனஅடி தண்ணீர் தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்வைக்க போகிறது.  நேற்றைய கூட்டத்திலும் தமிழழகத்திற்கு 16,000 கன அடி தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்தோம். என்ன காரணத்தினால்,  3000 கண்ணாடி தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்படுகிறது என்று கேள்வியையும் முன் வைத்தோம்.

duraimurugan

 அதற்கு அவர்கள் கடந்த 28ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தனர். அது கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்டதால் 18 நாட்களில் 464 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று வரையில் தமிழகத்துக்கு நாலு புள்ளி 21 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது இன்னும் தமிழகத்துக்கு 0.454 டிஎம்சி தண்ணீர் வர வேண்டி உள்ளது. எனவே நாளைய கூட்டத்தில் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.