”மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதால் எங்களுக்கு ஒன்னுமே புரியல”- துரைமுருகன்
டெல்லியில் மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை நேரில் சந்தித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 6 முக்கிய மனுவை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “மேகதாது, காவிரி பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டிலிடம் பேசினோம். மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதால், அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை. புதிய அமைச்சரவை பதவியேற்றபின், துறை சார்ந்த அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உரையாடினோம்.
கர்நாடகாவில் இருந்து தற்போதைய சூழலில் தடையின்றி தண்ணீர் வருகிறது. ரியில் தடையின்றி தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒருபோதும் கர்நாடகா காவிரி நீரை திறந்தது கிடையாது. விரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம். லைப் பெரியாறு பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தோம்” என்றார்.