“மோடி ஜோசியம் சொல்லிட்டு போய்ருக்கார்”- அமைச்சர் எ.வ.வேலு

 
ev velu ev velu

ஆட்சி மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டதாக மோடி ஜோசியம் சொல்லி இருப்பதாக அமைச்சர் எ.வ. வேலு விமர்சித்துள்ளர்.

ev velu யார் இந்த எ.வ.வேலு? பேருந்து நடத்துனர் டூ பொதுப்பணித்துறை அமைச்சர்!  | Who Is Ev Velu Bus Conductor To Pwd Minister Smp | Asianet News Tamil

திருவள்ளூர் நகருக்கு  30 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி 100 நாள் வேலை திட்ட நிதி ஒன்றிய அரசு  அளிக்காமல் இருந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மோடி திமுக ஆட்சி மீது இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி  உள்ளார். அது நூற்றுக்கு நூறு உண்மை இல்லை, ஆட்சி மாற்றத்திற்கு தமிழகம் தயாராகி விட்டதாக மோடி ஜோசியம் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. மக்களுக்கு பார்த்துப் பார்த்து முதல்வர் மக்களின் வீடு வரை கொண்டு பல்வேறு திட்டங்கள் சேர்த்து இருக்கிறது. மக்களின் தேவைகளை முதல்வர் நிறைவேற்றி வருவதால் தமிழ்நாட்டு மக்கள் 200 தொகுதிகளை திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்து மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்” என்றார்.