தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

 
geetha jeevan

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது.  2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் என்று தெரிகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  அதேசமயம் சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டம் உன் வடிவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி இன்று தாக்கல் செய்தார். 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சட்டப்பேரவையில் பேசியதாவது: தற்போது சென்னை, விழுப்புரம், வேலூர் , தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம்,  திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறினார்.