"தகுதியான அனைவருக்கும் மார்ச் 28ம் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!!

 
periyasamy

பட்ஜெட் மீதான விவாதங்களுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவை  4வது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட்  கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில்  பட்ஜெட் விவாதம் மீது நிதியமைச்சரும்,  வேளாண் அமைச்சரும் இன்று பதிலுரை வழங்குகின்றனர்.

gold

இந்நிலையில் பொது நகை கடன் தள்ளுபடிக்காக நேற்று மட்டும் ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது  என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ,  இதுவரை 5 லட்சத்து 48 ஆயிரம் கடன்களுக்கு தள்ளுபடி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடிக்காக நேற்று ஒரேநாளில் ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.  வரும் 28ஆம் தேதிக்குள் அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி தொடர்பான ரசீதுகள் வழங்கப்படும்; அத்துடன் நகைகளும் ஒப்படைக்கப்படும்" என்றார்.

thangam thennarasu

அதேபோல் தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.6,230.45 கோடி கேட்கப்பட்டது; ஆனால் ரூ.352.85 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது என்று  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முன்னேற்ற நில வங்கி உருவாக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் தொடங்க ஏற்ற இடமாக உள்ளது. தொழில் பூங்காக்களை அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது, விவசாயிகள் பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.விவசாயிகள் இடம் தர முன்வந்தால் அதை அரசு பெற்றுக் கொள்ளும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.