பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் - அமைச்சர் அறிவுறுத்தல்

 
KKSSR

இன்று மாலை முதல் நாளை மாலை வரை கனமழை இருக்கும் எனபதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

நேற்று முன் தினம் (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (02-12-2023) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

tn

மிக்ஜாம் புயல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது: இன்று மாலை முதல் நாளை மாலை வரை கனமழை இருக்கும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். ரயில், விமானம் ரத்து காரணமாக பாதிக்கப்படும் பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.