அமைச்சர் என் அண்ணன்; செல்லமாகத்தான் தட்டினார் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெண்!!

 
rn

தமிழக வருவாய் துறை அமைச்சர் என்னை தலையில்   செல்லமாக தட்டினார் என்று சம்பந்தப்பட்ட பெண் பேட்டியளித்துள்ளார்.


tn

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இலவச ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.  அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலாவதி என்னும் பெண் அமைச்சரிடம் மனு கொடுக்க வந்துள்ளார் . என் குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது,  வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டுமென்று அவர் கூறியதாக தெரிகிறது.  மனுவை வாங்கிய அமைச்சர் அந்த பெண்மணி தன் கஷ்டத்தை தெரிவித்து மனுவால் தலையில் தட்டியுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. 

tn

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்தக் காணொளியை பார்த்த போது, ஓர் அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எப்படி முன்வந்து ஆட்சியாளர்களிடம் குறைகளைத் தெரிவிப்பார்கள்? தி.மு.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லி திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்தி விரட்டுவதும்தான் மேடைக்கு மேடை திரு.ஸ்டாலின் முழங்கி வரும் திராவிட மாடல் போலும்!?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

KKSSR

இந்நிலையில் அமைச்சர் என் அண்ணன், சொந்தக்காரர் தான்.  அந்த உரிமையிலே என்னை செல்லமாக தட்டினார் என்று மனுக்கொடுத்த  பெண்  விளக்கமளித்துள்ளார். விருதுநகர் அருகே நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் மனு கொடுக்க வந்த பெண்ணை தலையில் பேப்பரால் அடித்தது வைரலான நிலையில் அப்பெண் விளக்கம் அளித்துள்ளது இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.