குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

 
ration

திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி திமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் முக ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.  இதன்பிறகு பல அறிவிப்புகள்,  நலத்திட்டங்கள் வெளியிடப்பட்டாலும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை திட்டம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ration

அதேசமயம் புதிய குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. காரணம் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உரிமை தொகையை மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்பதால் பல்வேறு தரப்பினரும் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

nehru

அதே சமயம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ரூபாய் 1000 உரிமை தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.  இதில்  போலி அட்டைகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டுகளின்  விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, "அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா?; தற்போது நடைபெற்றதை விட நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது. ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் நகர்ப்புற மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்" என்றார்.