கலை, அறிவியல் மாணவர்களுக்கு குட் நியூஸ்! 20% கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் கோவி .செழியன் அறிவிப்பு..!!

 
அரசு கலைக் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் கோவி .செழியன் அறிவிப்பு..!! அரசு கலைக் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை - அமைச்சர் கோவி .செழியன் அறிவிப்பு..!!


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 - 26ல் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என  அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விடுத்துள்ள அறிவிப்பில், இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேரக்கூடிய மாணவர்களின் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றும்,  அரசு கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் தொடர்ச்சியாக மிகுந்த ஆர்வத்துடன் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த (2025 - 26) ஆண்டு மாணவர் சேர்க்கை முதல் கட்டமாக முடிந்துவிட்டது.  மேலும் மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளதாலும், முதலமைச்சர் உயர் கல்வித் துறைக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் நடப்பாண்டு அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

கல்லூரி மாணவர்கள்

அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபாண்டு 20 சதவீதம் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.  இதேபோல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவிகிதம் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்றும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 10% சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். மாணவர்கள் அதிகம் பேர் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்