பொது இடங்களில் முககவசம் கட்டாயமாக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma subramanian


தமிழகத்தில் பொது இடங்களில் தேவைப்பட்டால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும்  என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகர் 8-வது பிரதான சாலை அருகில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முகாம் மற்றும், சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்களை இங்கு நடத்தி வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவுதான்.

face mask

கொரோனா பாதித்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் போட வேண்டிய அவசியம் தற்போது இல்லை. தேவைப்பட்டால் கட்டாயமாக்கப்படும். இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்” என்று கூறினார்.