"தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
tn

தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில்  கடந்த 24 மணிநேரத்தில்  21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம்  தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 54ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில், இதுவரை கொரோனாவுக்கு  38,025 பேர் பலியாகியுள்ளனர்.  அதேசமயம் கொரோனா உருமாறுதல்கள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழ தொடங்கிவிட்டது. கொரோனோ தொற்றில் வரும் உருமாறுதல்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். உருமாறி வரும் கொரோனோ குறித்து மாறி மாறி தகவல்கள் வந்து கொண்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் XE போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை . BA2 ஒமிக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியிருந்தார். 

tn

இந்நிலையில் மதுரையில் உள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று விபத்து ஏற்பட்டு இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். 

tn

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் புதிதாக பரவிவரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடைய தேவையில்லை. தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று  கண்டறியப்படவில்லை" என்றார். அத்துடன் மக்கள் பயன்பாட்டுக்கு 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து  தொடங்கி வைத்தார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.  இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.