சாலையில் பேப்பர் சேகரிப்பவரை வீட்டுக்கு அழைத்து சென்று அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்

 
பேப்பர் சேகரிப்பவரை வீட்டுக்கு அழைத்து சென்று அமைச்சர் செய்த நெகிழ்ச்சி செயல்

சென்னையில் சாலையோரம் பேப்பர் சேகரிக்கும் ராஜா என்ற நபருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேலை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(22.07.2024) இன்று, சென்னை கிண்டியில் காலை நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது, தெருவோரம் காகிதம் எடுத்து பிழைப்பவர் திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் அமைச்சரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். உடனே அவரை அழைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராஜாவை அருகில் அழைத்து விசாரித்தபோது, அவர் அவரது ஏழ்மை நிலைமையை விளக்குகியுள்ளார்.

உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவருடைய வாகனத்திலே தம்முடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று குளிக்க சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் மருத்துவமனை பணியாளர் பணியை வழங்கி உதவி செய்துள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இன்று காலை நடைபயிற்சி முடித்து வந்துகொண்டிருந்த போது சாலை ஓரத்தில் பேப்பர் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சேகரித்துக்கொண்டிருந்த ஒருவர் நம்மை அடையாளங்கண்டு வணக்கம் சொன்னார்.அவர் குறித்து விசாரித்ததில் திருச்சியை சார்ந்த ராஜா என்பதும்,அவர் தினந்தோறும் இப்பணியை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் அரைகுறையாக உண்டு சாலையோரங்களில் படுத்துறங்கும் ஆதரவற்ற தோழர் என்பதும் தெரியவந்தது.அவரை நமது தொழிலாளர் குடியிருப்பு இல்லத்தில் குளிக்கவைத்து மாற்று ஆடைகளை தந்து உடுக்கவும் வைத்து கலைஞர் நூற்றாண்டு உயற்சிறப்பு மருத்துவமனையில் அவரின் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைகளும்,வாழ்வாதாரத்திற்கு தற்காலிக பணி ஒன்றும் வழங்க நடவடிகை எடுக்கப்பட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.