"பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா?" அண்ணாமலைக்கு மா.சு. பதிலடி!!

 
ma Subramanian

தூத்துக்குடி,  கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டார்.  சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்று அவர்  தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

yn

அப்போது பேசிய அவர்,   செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே ஒமிக்ரான்  கண்டறியப்பட்டுள்ளது . தெலுங்கானா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ள மரபணு பகுப்பாய்வு  ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  இந்தியாவில் ஒருவருக்கு திய வகை ஒமிக்ரான் தொற்று  இருப்பது கண்டறியப்பட்டு உள்ள நிலையில் , அவர் நலமுடன் இருக்கிறார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக இல்லை.  அதனால் மக்கள் பதட்டமடைய தேவையில்லை.  புதிய வகை தொற்றுப் அறவே இல்லை.   தமிழகத்தில் 50 க்கும் கீழ் தொற்று பாதிப்பு உள்ளது.  தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில்  உயிரிழப்பு எதுவும் இல்லை.  காலிப்பணியிடங்கள் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளபடி,   4000க்கும்  மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . செவிலியர்கள் 4448 பேரும்,  சுகாதாரப் பணியாளர்கள் 2448 பேரும் என மொத்தம் 7 ஆயிரத்து 296 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

tn

 ஏற்கனவே இருந்த ஊதியத்தைவிட செவிலியர்களுக்கு 4000 ஊதியமும் , சுகாதார பணியாளர்களுக்கு 360 உயர்த்தப்பட்டுள்ளது.  சுகாதாரத்துறையில் 4000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  72 மணி நேரத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார் . பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள்,  குறைப்பது நாங்களா? என்று அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது . இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.