" 2 நாட்களாக தமிழகத்தில் குறைந்தது கொரோனா ; ஆனால் மீண்டும்..." : அமைச்சர் சொல்லும் தகவல்!!

 
minister ma subramanian

பொங்கல் விடுமுறைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

tn
மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

minister

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "1962ஆம் ஆண்டு சட்ட மன்ற மேலவை உறுப்பினர் ஆகி அடுத்தடுத்து அரசியலில் சிறப்பாக பணியாற்றியவர் எம்ஜிஆர்" என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்று   குறைந்து வருகிறது. இருப்பினும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு மீண்டும் தொற்று  அதிகரிக்க வாய்ப்புள்ளது.  60 வயதுக்கு மேற்பட்ட 90 லட்சம் பேர் இரண்டாவது தடுப்பூசி போடாமலேயே இருக்கிறார்கள்.  அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.  கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  9 ஆயிரத்திற்கும் குறைவாகவே படுக்கைகள் நிரம்பி உள்ளது . தேவையான அளவு ஆக்சிஜன்,  மருந்துகள் கையிருப்பில் உள்ளன.  அரசு மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளின் நேரம் அதிகரிப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து பிறகு முடிவு எடுக்கப்படும்" என்றார்.