தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
ma Subramanian ma Subramanian

தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தொற்று பரவலை கையாள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது. 

குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை குறித்து மாவட்ட சுகாதார அலுவர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் குட்கா விவகாரம் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை பற்றி தகவல்கள் கொடுத்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், தகவல் தருபவர்களின் ன் ரகசியம் காக்கப்படும்.  குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது. இந்த தடையை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.