கடல் உள் வாங்காததால் தான் வெள்ளம் வடியவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
masu

வெள்ளம் வெளியேறவில்லை எனக் கூற முடியாது, கடல் உள் வாங்காததால் தான் வெள்ளம் வடியவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Image

சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வெள்ளம் வெளியேறவில்லை எனக் கூற முடியாது, கடல் உள் வாங்காததால் தான் வெள்ளம் வடியவில்லை. 2015ல் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திருக்காது. வெளி மாவட்டங்களில் இருந்து 5000-க்கும் மேற்பட்டோர் வந்து தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் தொண்டு நிறுவனங்களும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாநகராட்சி பணியாளர்கள் மட்டுமே தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்


அரசியல் செய்ய பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் மழை பாதிப்புகளில் அரசியல் செய்ய வேண்டாம். சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மழைநீர் வடிகால் பணிக்கு எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து விவாதிக்க நான் தயார். எடப்பாடியாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் சரி நேரில் வாங்க விவாதிக்கலாம். ஒருவர் கூட விட்டுப்போகாத வகையில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ 6,000 வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேரடியாக ரேஷன் கடைகள் மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு சொட்டு கண்ணீரை துடைத்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள்.