நீட் விலக்கு பெற இபிஎஸ், தமிழிசை உதவ வேண்டும் - மா.சுப்பிரமணியன் பேட்டி!

 
Ma Subramanian Ma Subramanian

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5%-லிருந்து 10% வரை உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவியின் தாலியை கழற்றி
 தேர்வு எழுதும் வண்ணம் ஒரு கொடுமையான. தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது. கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வழிகளில் நீட் தேர்வு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5%-லிருந்து 10% வரை உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நீட் விலக்கு பெற இபிஎஸ், தமிழிசை ஆகியோர் அரசுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு வேறு பேசுவது அவர்களின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என கூறினார்.