“முதல்வரின் அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளால் வேளச்சேரி வெள்ளச்சேரி ஆகால”- மா.சு.

 
s s

முதல்வரின் அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளால் வேளச்சேரி வெள்ளச்சேரி ஆகாமல் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4  குளங்கள் கனமழை காரணமாக நிறைந்துள்ளதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், சைதாப்பேட்டை,கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் 5 லட்சம் மக்கள் அச்சத்தை போக்கும் விதத்தில் இந்த நீர் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸில் அமைக்கப்பட்டுள்ள ஆறு குளங்கள் மூலம் சுமார் 24 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிப்பது மட்டுமல்லாமல், வேளச்சேரி, மடுவின்கரை கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளதடுப்பு, கோடை காலத்தில் நிலத்தடி நீர் அதிகரிக்கவும் இது பயனுள்ளதாக உள்ளது என்றார்.

கடந்த ஒன்றாம் தேதி முதல் இன்று வரை சென்னை முழுவதும் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்த போதும்,  வேளச்சேரி, கிண்டி போஎன்ற பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்காமல் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம்  முதலமைச்சரின் அறிவியல் பூர்வமான நடவடிக்கை என்றார். சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் உள்ள ஆறு குளங்கள் நிரம்பினாலும் வெளியேறும் உபரிநீரை அடையாற்றில் கொண்டு சேர்க்கும் வகையில் திட்டம் விரைவில் செயல்படுத்தவுள்ளதாவும், கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதினால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. இதேபோல பெருங்குடியில் 4 கோடி லிட்டர் அளவு 2 குளங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வேளச்சேரி வெள்ளச்சேரி ஆகாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக முழுவதும் நோய் பரவாமல் தடுப்பதற்கு கடந்த 16 தேதி முதல் 59 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பருவமழையில் பெரிய அளவு நோய் பாதிப்புகள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.