அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தேறி வருகிறார் - மா.சுப்பிரமணியன் பேட்டி

 
senthil balaji senthil balaji

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் தேறி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர்,  அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  ஆஞ்சியோகிராம் சோதனையில் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பதாகவும்,  அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றாப்பட்ட அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர்  உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தது.  அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த தேதியில் பைபாஸ் சர்ஜரி.. காவேரி மருத்துவர்கள்  முடிவு..

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார். எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம். சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன். இவ்வாறு கூறினார்