குன்னூர் பேருந்து விபத்தில் 9 பேர் பலி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி!

 
masu masu

குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். 

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மீட்புப்படையினர் மற்றும் போலீசார், பேருந்து கவிழ்ந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குன்னூர் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.  குன்னூர் பேருந்து விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

accident

இந்த நிலையில், குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.