பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ.10,346 கோடி விடுவிப்பு!
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை 10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


