"அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது" - அமைச்சர் மிரட்டல்!!

 
tn

கோட்டையை முற்றுகையிடுவோம் என்று கூறிய அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என்று அமைச்சர் பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

govt

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டார்.  அப்போது பேசிய அவர் , "தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்,  நகை கடன் தள்ளுபடி , பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் திட்டம் என பல்வேறு செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.   மக்களுக்கு பயன் பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடர்ந்து அமையும்" என்றார்.

ann
தொடர்ந்து பேசிய அவர், "72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார் . அவ்ளோ தைரியமா?... பாத்துடலமா? இது திமுக ஆட்சி ; சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது . அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை  தாண்ட முடியாது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று கூறியவர் அண்ணாமலை.  தற்போது அவர் பாஜக தலைவர்.  இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப்போகிறார் ?மத கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை.  இது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி; சவாலுக்கு பயப்பட மாட்டோம்" என்று கூறியுள்ளார்.  அமைச்சர் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.