மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்- அமைச்சர் முத்துசாமி

 
 அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத் தொகையை மாநில  அமைச்சர் முத்துசாமி இன்று வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பீர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. மது அருந்துபவர்களை ஊக்குவிப்பதற்காக அல்ல. வியாபாரத்தை பெருக்குவது எங்களது நோக்கமல்ல. எப்படியாவது மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். விரைவில் 90 எம்.எல். டெட்ரா மது பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான திட்டமிட்டலும், ஆலோசனையும் நடைபெற்றுவருகிறது. கர்நாடகாவில் டெட்ரா பாக்கெட்டில் மதுவிற்கப்படுகிறத். தமிழகத்தில் தற்போது 180 எம்.எல். பாட்டிலில் மது விற்கப்படுகிறது.  ஆனால் அதனை பயன்படுத்த தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். 

இது மது பாட்டில்கள் உடைக்கப்படுவதற்கு மாற்றாக கொண்டு வரப்படும் முயற்சியே தவிர, மது குடிப்போரை உயர்த்தவோ, விற்பனையை அதிகரிக்கவோ மேற்கொள்வதற்கான முயற்சி அல்ல. டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனையை அதிகரிக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.   டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையைக் கட்டுப்படுத்த சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன” என்றார்.