"திடீர் ஆய்வு...தயாராக இருங்கள் ; மீறினால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் நாசர் எச்சரிக்கை!!

 
tn

பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  அம்பத்தூர் பால்பண்ணை , சோழிங்கநல்லூர் பால்பண்ணை என அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும். தவறு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

 நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  தலைமையில் பால்வளத்துறைக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 14ஆம் தேஹத்தி  நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் நடைபெற்ற முன்னேற்றம் குறித்து  விவாதிக்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில், பால் கொள்முதல் உற்பத்தி) எவ்வளவு அதிகரித்துள்ளது குறைந்துள்ளது என்றால் அதற்கான காரணம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் வாயிலாக பொது மேலாளர்களிடம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

minister nasar

மார்ச் 2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு பால் கொள்முதல் குறித்து ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு மாவட்ட ஒன்றியங்களிலும் துணை பதிவாளர் (பால்வளம்) அனைத்து எத்தனை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், பால் உற்பத்தியாளர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு, எத்தனை பால் உற்பத்தியாளர்கள் பங்கு பெற்றனர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை எத்தனை, அதில் எத்தனை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன என்கின்ற விவரங்களை கேட்டறிந்தார்.

தமிழக முதலமைச்சர் பால் விலையை உயர்த்தாமல் சேவை மனப்பாண்மையுடன் செயலாற்றி வருகின்றார். ஆனால் பால் உப பொருள்களை நாம் அதிகமாக உற்பத்தி செய்வதன் மூலம் பெருமளவு இலாபம் கிடைக்கும். பால் உப பொருள்களின் திறன் மற்றும் உற்பத்தி விவரம் என்ன குறிப்பாக பால் உபபொருள்களான நெய், வெண்ணெய், பால்பவுடர், பால்கோவா, பாதாம் மிக்ஸ் தயிர், மோர். நறுமணப்பால் இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் 

aavin

இப்போது கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது. வருமானம் வரும் நேரம், தயிர், மோர், லெஸ்ஸி, ஐஸ்கிரிம், எல்லாம் மக்களிடம் எளிதில் சென்றடைகின்றது. ஆவின் பால் பொருள்களுக்கென தனி முத்திரை உலக அளவில் உள்ளது. இதனை நாம் பயன்படுத்தி கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும். 75% சதவிதம் பேர் சிறப்பாக பணியாற்றினாலும் ஒருசிலர் செய்யும் தவறுகளால் பின்னடைவு ஏற்படுகின்றது. ஆவின் பாலகங்களில் பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுபாடு இன்றி கிடைப்பதை ஆவின் அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும் பிரச்சினைக்குறிய ஒன்றியங்களில், அந்தப் பகுதி பொது மேலாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கூட்டுறவு ஒன்றியப் பகுதிகளிலும் சுமார் 500 க்கும் மேல் நபர்கள் பணியாற்றுகின்றனர். பொது மேலாளர்களாகிய தாங்கள் இங்கு தெரிவிக்கப்பட்ட விவரங்களை அவர்களுக்கு எடுத்து சொல்வதன் மூலம் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது. அதுபோல பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா தங்கு தடையின்றி செல்வதையும் உறுதிபடுத்த வேண்டும்.

tn

சென்னை மற்றும் இது போன்ற பெருநகரங்களில், ஞாயிற்றுக்கிழமை விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்

கறந்தபால் கலப்படமில்லாமல் மக்களிடம் சென்றடைவது ஆவின் மூலம் மட்டுமே. செயலிலாத சங்கங்களை புதுப்பித்தல் அவசியமாகும். அம்பத்தூர் பால்பண்ணை , சோழிங்கநல்லூர் என அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகள்பணியில் இருக்க வேண்டும்.

சட்டசபை நடைபெறும் நாட்களை தவிர சனி, ஞாயிறு என்றாலும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களுடன் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொள்வேன், அதற்கு தயரான நிலையில் அனைவரும் இருக்க வேண்டும் என்று  அமைச்சர்  தெரிவித்தார்.