சீமான் எதை தான் விமர்சிக்கவில்லை? அமைச்சர் ஆவேசம்!!

 
periyakaruppan

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டம் என்பது, நாட்டின் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது.கிராமப்புறங்களில் இத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து ஓரளவு தங்களை காத்துக்கொள்ள உதவிகரமாக இருக்கும். 

seeman

இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சீமான்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசு மதிப்பதில்லை.  விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமானால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கவேண்டும் என்றார். இவரின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

seeman

இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், "கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக 100 நாள் வேலை திட்டம் இருக்கிறது.   சீமான் எதை தான் விமர்சனம் செய்யவில்லை .எந்த செயலுக்கும் எதிர்வினை ஆற்ற கூடியவராக இருக்கிறார் என்று 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சீமான் கூறியதற்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்துள்ளார்.