நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை

 
ponmudi

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளாது.  

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த,  1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.  அந்த காலகட்டத்தில் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரித்து தனது மாமியார் பெயரில் பதிவு செய்ததாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, அப்போதைய அடையாறு சார்-பதிவாளர் புருபாபு உள்ளிட்ட 10 பேர் மீது  வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக சென்னை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

ponmudi

இந்தநிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு உத்தரவிட்டது.  இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2017ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்ததது உயர்நீதிமன்றம். இந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே  பொன்முடியின் மாமியார்  மற்றும் சார் பதிவாளர் உள்ளிட்டோர் உயிரிழந்த நிலையில், மற்ற 7 பேர் மீதான வழக்கு விசரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரனை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போதிய ஆவணங்கள் இல்லாததால், நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.