சர்ச்சை பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் - அமைச்சர் பொன்முடி!

 
ponmudi

தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சர்ச்சை பேச்சு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.  

இந்த நிலையில், தனது தகாத பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தவறான சொற்களைப் பயன்படுத்தி
நான் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். "தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். நீண்ட பொதுவாழ்க்கையில் உள்ள எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.